Your Language
பிசிஓஎஸ் பற்றிய உண்மையை பகிர்தல்
+ பிசிஓஎஸ் என்றால் என்ன?
பலகட்டிகளுள்ள சூலகங்களின் கூட்டு அறிகுறிகள் (பிசிஓஎஸ்) என்பது இன்றைய காலத்தில் இனப்பெருக்க வயதில் (15-45 வயது) இருக்கும் ஒரு பெண் எதிர்கொள்ளும் மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் இனப்பெருக்க வயதில் உள்ள பெண்கள் தொகையில் தோராயமாக 36% பெண்கள் பிசிஓஎஸ் காரணமாக அவதிப்படுகின்றனர் அல்லது இன்னும் தெளிவாக சொல்வதென்றால் இனப்பெருக்க வயது குழுவில் இருக்கும் ஒவ்வொரு 4 பெண்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பல கட்டிகளுள்ள சூலகங்களால் அவதிப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. சமீப காலங்களில் கூட ஏதேனும் சமூக அல்லது ஊடக தளங்களில் பெண் ஆரோக்கியம் பற்றி மிக அதிகமாக பேசப்பட்ட விஷயங்களில் பிசிஓஎஸ் ஒன்றாகும். இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது மற்றும் நம்மில் யாருக்கும் ஏற்படக்கூடும். இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர ஒருவர் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் அனைத்தையும், அதே போல் சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால் மலட்டுத்தன்மைக்கு வழிவகுக்கக் கூடிய பிசிஒஎஸ் சிக்கலை தவிர்ப்பதையும் இங்கே ஒருவர் புரிந்து கொள்ளும் தேவை மட்டுமேயுள்ளது.

பிசிஓஎஸ்-யை கண்டறிய உதவும் அடையாளங்கள்
  • முகப்பரு/பருக்கள் மற்றும் அதிக ரோம வளர்ச்சி/மிகுதியான முடி வளர்ச்சி
  • உடல் பருமன்/அதிக எடை
  • சீரற்ற மாதவிலக்கு காலங்கள்
  • நிறமிகள், குறிப்பாக கழுத்து மற்றும் அக்குள்களில் இருப்பது
  • பலகட்டிகளுள்ள சூலகங்களை (சூலகங்களில் கட்டிகள் உருவாகுதல்) நுண்ஒலி அலை படப்பரிசோதனை (யுஎஸ்ஜி) மூலம் உறுதி செய்ய முடியும்.

பிசிஓஎஸ்-ன் அடையாளங்கள் சீக்கிரமாகவே ஏற்பட தொடங்கக்கூடும், ஆனால் பெரும்பாலான நோயாளிகளுக்கு வளரும் பருவத்தின் பிற்பகுதியிலும் மற்றும் வயதுக்கு வந்த ஆரம்பத்திலும் அடையாளங்கள் வெளிப்படத் தொடங்கும். பிசிஓஎஸ் அடிக்கடி தவறாக கண்டறியப்படலாம் அல்லது முகப்பரு/பருக்கள் மற்றும் அதிக ரோம வளர்ச்சி/மிகுதியான முடி வளர்ச்சி போன்ற வெளியில் தெரியும் அடையாளங்களால் ஒரு அழகியல் பிரச்சனையாக தெளிவுடன் சுயமாக கண்டறியப்படலாம்.

எனினும், பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு அவர்களது மாதவிலக்கு சுழற்சியில் ஒரு பிரச்சனை ஏற்படும் வரையில் அல்லது கருத்தரிப்பது சிரமமாக இருப்பதை அவர்கள் கண்டறியும் வரையில் தாங்கள் பிசிஓஎஸ் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது தெரியவருவதில்லை அல்லது உணர்வதில்லை.

1) பலகட்டிகளுள்ள சூலகங்கள் (சூலகங்களில் கட்டிகள் உருவாகுதல்):
ஒவ்வொரு பெண்ணுக்கும் இரண்டு சூலகங்கள் இருக்கும், இவை கருப்பையின் இரண்டு பக்கத்திலும் அமைந்திருக்கும். ஒவ்வொரு சூலகமும் சுமாராக ஒரு பெரிய கோலிக்குண்டு அளவில் இருக்கும். கருமுட்டைகள் மற்றும் பல்வேறு ஹார்மோன்களை இந்த சூலகங்கள் உற்பத்தி செய்கிறது.
ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சியின் போதும் வழக்கமாக சூலகங்களில் பல சிறிய குழிவான நுண்ணறைகள் வளர்ந்து மற்றும் முட்டைகள் உருவாகும். சுழற்சியின் நடுவில், சூலகங்களில் ஒன்றிலிருந்து கருமுட்டை குழாய்களுக்குள் ஒரு கருமுட்டை விடுவிக்கப்படுகிறது. இது ‘கருமுட்டை வெளிப்படும்’ முறை என்றழைக்கப்படுகிறது. இதர குழிவான நுண்ணறைகள் முற்றி மற்றும் உடைந்து விடும்.
பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ‘கருமுட்டை வெளிப்படுதல்’ நடைபெறுவதில்லை மற்றும் ஒரு கருமுட்டையும் விடுவிக்கப்படுவதில்லை. குழிவான நுண்ணறைகள் உடைவதில்லை, ஆனால் அதில் திரவம் சேர்ந்து கட்டிகளாக மாறுகின்றன, இவை ஏதோ ஒரு திராட்சைக் கொத்து போல் தோன்றுகிறது. சூலகங்கள் வீங்கி, சிலசமயங்களில் வழக்கத்தை விட இரண்டு முதல் ஐந்து மடங்கு பெரிதாகி விடும்.
உங்களுக்கு பலகட்டிகளுள்ள சூலகங்கள் உள்ளதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்க ஒரு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனைக்கு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

2) சீரற்ற மாதவிலக்கு காலங்கள்:
இனப்பெருக்க வயதில் உள்ள ஒரு பெண்ணுக்கு சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு மாதவிலக்கு சுழற்சி இருக்கும், இருப்பினும் இது 25 முதல் 35 நாட்களாக வேறுபடலாம். பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு, மாதவிலக்கு காலங்கள் வழக்கமாக 35 நாட்களுக்கு மேற்பட்ட இடைவெளிகளில் (சீரற்ற மாதவிலக்கு காலம்) இருக்கும் அல்லது மாதவிலக்கு வராமலேயே இருக்கலாம்.
பிசிஓஎஸ் உள்ள பெண்களில் சுமார் 99% பேருக்கு மாதவிலக்கு சீரற்று இருப்பது சமீபத்திய ஆய்வுகளை நாம் பரிசீலித்தால் தெரியும்.
உங்களுக்கு மாதவிலக்கு சுழற்சிகள் சீரற்று இருந்தால், அது மிகவும் தாமதமாவதற்கு முன்பு ஒரு நடவடிக்கை எடுக்கவும், அதோடு தயவு செய்து கூடிய விரைவில் உங்கள் மருத்துவருடன் ஆலோசியுங்கள்.


3) முகப்பரு/பருக்கள் மற்றும் அதிக ரோம வளர்ச்சி/மிகுதியான முடி வளர்ச்சி:
முகப்பரு மற்றும் அதிக ரோம வளர்ச்சி ஆகியவை மிகவும் பொதுவாக தெரியக்கூடிய பிசிஓஎஸ் அறிகுறிகளில் ஒன்றாகும். அதிக ரோம வளர்ச்சி என்பது வேறொன்றுமில்லை, ஆனால் வழக்கமாக பின்புறங்கள், முதுகு, மார்பு அல்லது முகத்தில் முடி வளர்ச்சி மிகுதியாக இருப்பதாகும். முகப்பரு ஒரு சரும நோய் என்பதால், அதில் பருக்களை ஒத்திருக்கும் கொப்புளங்கள் உருவாகும். முகப்பரு/பருக்கள் வழக்கமாக முகம், முதுகு மற்றும் மார்பில் காணப்படும். பிசிஓஎஸ் உள்ள பெண்களில் சுமார் 75% பேருக்கு அதிக ரோம வளர்ச்சி இருக்கும் மற்றும் பிசிஓஎஸ் உள்ள பெண்களில் சுமார் 34% பேருக்கு முகப்பரு/பருக்கள் இருக்கும்.
பிசிஓஎஸ் உள்ள பெண்ணுக்கு சூலக கட்டிகள் ஒரு சமச்சீரற்ற ஹார்மோன் நிலையை ஏற்படுத்துகிறது, இதனால் ஆண் ஹார்மோன்கள் (டெஸ்டோஸ்டிரோன் போன்றவை) அதிகபடியாக உற்பத்தி ஆகிறது. அதிகபடியான ஆண் ஹார்மோன் முகப்பரு/பருக்கள் மற்றும் அதிக ரோம வளர்ச்சி/மிகுதியான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.


4) உடல் பருமன்/எடை அதிகரித்தல்:
பிசிஓஎஸ்-ன் ஒரு பொதுவான அம்சம், உடல் பருமனாவது அல்லது விடாமல் எடை அதிகரித்து கொண்டே இருப்பது. பிசிஓஎஸ் உள்ள பெண்களில் சுமார் 50% பேர் உடல் பருமன் உள்ளவர்கள். சாப்பிடும் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் பிசிஓஎஸ் உள்ள பெண்களை மேலும் உடல்பருமன் உள்ளவர்களாக செய்கிறது.
பிசிஓஎஸ் உள்ள பெண் உடல் பருமன் உள்ளவராக இருப்பதை பொதுவாக காணலாம், இது ஏனெனில் அவர்களின் உடல் செல்கள், இன்சுலின் என்றழைக்கப்படும் சர்க்கரை/க்ளூகோசை கட்டுப்படுத்தும் ஹார்மோனுக்கு எதிர்ப்பாற்றல் கொண்டதாக இருக்கிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பாற்றலானது சர்க்கரை/க்ளூகோசை செல்கள் பயன்படுத்துவதை தடுப்பதால் அது கொழுப்பு H˄ ஆக சேகரிக்கப்பட்டு உடல் பருமன் அல்லது எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.
ஹார்மோன்களுக்குள் சமச்சீரற்ற நிலையை உடல்பருமன் ஏற்படுத்துவதால் அது மாதவிலக்கு காலங்களை பாதிக்கிறது. இதற்கு நீங்கள் உடல்பருமன் அல்லது அதிக எடை உள்ளவராக இருந்தால் எடையை குறைக்க மற்றும் ஆரோக்கியமான உணவுமுறையை சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

5) நிறமிகள், குறிப்பாக கழுத்து மற்றும் அக்குள்களில்:
பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அவர்களது கழுத்தின் பின்புறம், அக்குள்கள், நெற்றி, அனேகமாக உடலில் வேறு சில பகுதிகளில் நிறிமி அல்லது அடர் சரும திட்டுகளால் அவதிப்படலாம். இது ஏனென்றால் ரத்தத்தில் இன்சுலின் ஹார்மோன் மிகவும் அதிகமாக இருப்பதே ஆகும். ஒரு பெண் நோயியல் நிபுணரிடம் உடனடி அடிப்படையில் ஆலோசனை கோர அறிவுறுத்தப்படுகிறது.





6) மலட்டுத்தன்மை:
மலட்டுத்தன்மை என்பது கருத்தரிப்பதில் (கருவுறுதல்) இருக்கும் சிரமத்தை குறிக்கிறது. தற்போதைக்கு மலட்டுத்தன்மைக்கான மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக பிசிஓஎஸ் இருக்கிறது. பிசிஓஎஸ் உள்ள ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு காலங்கள் சீரற்று இருப்பது அல்லது மாதவிலக்கு வராதது கருமுட்டை வெளிப்படுதல் (சூலகங்களில் கருமுட்டைகள் உருவாகி மற்றும் வெளிவருவது) இல்லாததுடன் அடிக்கடி சம்பந்தப்பட்டது, இது கருவுறுதல் அல்லது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புகளை குறைக்கிறது.
நீங்கள் கர்ப்பம் தரிப்பதில் சிரமம் இருந்தால், ஆலோசனை கேட்கவும் ஏனெனில் அது பிசிஓஎஸ் ஆக இருக்கலாம்.


+ சிகிச்சை அளிக்கப்படாத பிசிஓஎஸ்-ன் விளைவுகள் என்னென்ன?
பிசிஓஎஸ் பற்றி ஒருவர் புரிந்து கொள்ள வேண்டிய மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால், அது வெறும் ஒரு அழகியல் அல்லது மாதவிலக்கு கால பிரச்சனை அல்ல. அது பல வித நீண்ட கால பிரச்சனைகளை ஏற்படுத்தும் அபாயத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடும். பிசிஓஎஸ் உள்ள ஒரு பெண், அதன் அறிகுறிகள் மறைந்தாலும் கூட மாதவிலக்கு நிரந்தரமாக நிற்கும் காலம் வரையில் பெண் நோயியல் நிபுணரிடம் வழக்கமான அடிப்படையில் ஆரோக்கிய பரிசோதனை செய்து கொள்வது முக்கியமாகும்.

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவர்களுக்கு கீழ்க்கண்ட நிலைகள் அல்லது நோய்கள் வரும் அபாயம் அதிகமாக இருக்கும்:
  • மலட்டுத்தன்மை/கர்ப்பம் தரிக்க இயலாதது
    ஏற்கனவே விவாதித்தப்படி, மலட்டுத்தன்மை அல்லது கர்ப்பம் தரிக்க இயலாததற்கான ஒரு பொதுவான காரணமாக பிசிஓஎஸ் விளங்குகிறது. ஆகவே எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை ஏற்படும் அபாயத்தை தவிர்க்க பிசிஓஎஸ்-ஐ முன்கூட்டியே கண்டறிய வேண்டும்.







  • நீரிழிவு
    பிசிஓஎஸ் உள்ள பெண்களில் சுமார் 50% பேருக்கு 40 வயதுக்கு முன்பே நீரிழிவு இருக்கும் அல்லது நீரிழிவுக்கு முந்தைய நிலை இருக்கும். ஆகவே உங்களுக்கு பிசிஓஎஸ் இருந்தால், நீரிழிவு வருவதை தவிர்க்க ஏதுவாக உடற்பயிற்சி செய்வதற்கு மற்றும் உணவுமுறை பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.






  • ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய ரத்த நாள நோய்
    பிசிஓஎஸ் பெண்களுக்கு ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகும். கொலஸ்ட்ராலுக்கும் இதய ரத்த நாள நோய்க்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதால், அந்த நோய் (மாரடைப்புகள்) அபாயம் பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு அதிகரிக்கக்கூடும்.






  • கர்ப்பநிலை சிக்கல்கள்
    பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சிக்கல்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதில் குழந்தைகள் வெகு சீக்கிரமே பிறப்பது அல்லது கர்ப்பகாலத்தில் (ப்ரீ-க்ளாம்ப்ஸியா) உயர் ரத்த அழுத்தம் இருப்பது அல்லது கர்ப்பகாலத்தின் போது நீரிழிவு வருவதும் கூட அடங்குகிறது. உங்களுக்கு பிசிஓஎஸ் இருந்தால், வழக்கமான அடிப்படையில் நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.





  • கருப்பை உள்வரி புற்றுநோய்/கருப்பையின் உட்படையில் புற்றுநோய்
    ஏற்கனவே விவாதித்தப்படி பிசிஓஎஸ் உள்ள பெண்ணுக்கு மாதவிலக்கு காலங்கள் சீரற்று இருக்கும் அல்லது மாதவிலக்கு காலமே இல்லாமல் இருக்கும். ஆகவே, அவர்களுக்கு கருப்பையின் உட்படையில் புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகமாகஇருக்கலாம்.






எனவே, உங்களுக்கு பிசிஓஎஸ் இருக்கலாம் என நீங்கள் சந்தேகித்தாலும் கூட உங்களின் அறிகுறிகளை தயவு செய்து அலட்சியம் செய்யாதீர்கள். இந்த சிறிய குறைகளுக்கு அப்பால் கவனம் செலுத்துவதோடு உங்கள் வழியில் குறுக்கிடக்கூடிய ஆரோக்கிய பிரச்சனைகளின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள வேண்டிய ஒரு அவசர தேவை உள்ளது.

+ பிசிஓஎஸ் வருவதன் காரணங்கள் என்னென்ன?
பிசிஓஎஸ் ஒரு பல-காரணி கோளாறு என்பது இப்பொழுது நமக்கு தெரிந்துள்ளது. கீழ்க்கண்டவை பிசிஓஎஸ் வருவதற்கு சாத்தியமாகும் காரணங்களாகும்.
  • வாழ்க்கைமுறை மாற்றங்கள்: சுகாதாரமற்ற உணவுப் பொருட்களின் வகைகள், நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது மற்றும் உடற்பயிற்சி செய்யாதது பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும். உடல் பருமன் அல்லது எடை அதிகரிப்பது ஹார்மோன்களில் சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்தும், இது உங்களின் மாதவிலக்கு காலங்களை பாதிக்கும்.
  • இன்சுலின் எதிர்ப்பாற்றல்: 50-80% நோயாளிகளுக்கு இன்சுலின் எதிர்ப்பாற்றல் பெரிய காரணமாக விளங்குகிறது. இது பெண்களுக்கு எடை மிகவும் அதிகரிக்க வழிவகுப்பதால், அது பிசிஓஎஸ் அறிகுறிகளை மோசமடையச் செய்கிறது.
  • ஹார்மோனல் சமச்சீரற்ற நிலை: பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு குறிப்பிட்ட சில ஹார்மோன்கள் சமச்சீரற்ற நிலையில் இருப்பது பொதுவானதாகும்.
  • குடும்ப வரலாறு: ஒரு பெண்ணின் தாய், அத்தை அல்லது சகோதரிக்கு பிசிஓஎஸ் இருந்தால் அவருக்கும் அது மிக அனேகமாக உருவாகலாம்.

+ மருத்துவரிடம் எப்போது செல்ல வேண்டும்?
முகப்பரு/பரு, அல்லது அதிக ரோம வளர்ச்சி/மிகுதியான முடி வளர்ச்சி போன்ற பிசிஓஎஸ்-ன் ஏதேனும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடையாளம் மற்றும் அறிகுறிகளால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், தயவு செய்து உடனே அருகிலுள்ள (பெண் நோயியல்) ஆலோசகரிடம் செல்லுங்கள். ஏனென்றால், மலட்டுத்தன்மை, நீரிழிவு, இதய ரத்த நாள நோய்கள் மற்றும் கர்ப்பநிலை சிக்கல்கள் முதலியவை போன்ற பல வித நீண்ட கால பிரச்சனைகள் ஏற்படும் அபாயத்தை பிசிஓஎஸ் அதிகரிக்கலாம்.

பிசிஓஎஸ்-ஐ முன்கூட்டியே கண்டறிவது உங்களுக்கு எதிர்காலத்தில் மலட்டுத்தன்மை போல் வரும் நீண்ட கால பிரச்சனைகளை தடுக்கும். ஆகவே, மிகவும் தாமதமாவதற்கு முன்பு ஒரு நடவடிக்கை எடுத்திடுங்கள்.

+ பிசிஓஎஸ்-க்கு என்னென்ன சிகிச்சை உள்ளது?
பிசிஓஎஸ்-ன் ஒன்றினை சமாளிக்கக்கூடிய பல வழிகள் உள்ளன. அறிகுறிகளின் தீவிரத்தை பொறுத்தே சமாளிப்பு தெரிவுகள் இருக்கலாம்.

வாழ்க்கைமுறை மாற்றம்:

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு, வாழ்க்கைமுறையில் ஆரோக்கியமான மாற்றங்களை செய்வது இந்த நிலையை சமாளிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். ஆகவே பிசிஓஎஸ் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீங்கள் உடல் பருமனுடன் இருந்தாலும் அல்லது ஒல்லியாக இருந்தாலும் சரி, வாழ்க்கைமுறை மேலாண்மை முக்கியமானதாகும்.

ஒரு ஆரோக்கியமான உணவுமுறையை பின்பற்றுவது ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாதுக்களை ஒரு ஆரோக்கியமான முறையில் நீங்கள் பெறுவதை உறுதிப்படுத்தும் மற்றும் நீரிழிவு மற்றும் இதய ரத்த நாள நோய் போல் நீண்ட-கால நோய் அபாயம் உங்களுக்கு வருவதை குறைக்கும்.

ஜிஐ குறைவான ஒரு உணவை சாப்பிடுதல்: குறைவான ஒரு க்ளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ஒருவர் தனது ரத்த சர்க்கரை அளவுகளை நன்கு சமநிலையுடன் வைக்க முடியும் மற்றும் பிசிஓஎஸ் அறிகுறிகளை குணமாக்கலாம். குறைந்த ஜிஐ உணவுகளில் முழு தானியங்கள், புரதம் குறைந்தவைகள், கொட்டைகள் மற்றும் விதைகள், மற்றும் ஏராளமான புத்தம் புதிய பழங்கள் மற்றும் மாவுச்சத்து-அற்ற காய்கறிகள் அடங்கும். உங்களின் பிரத்யேக தேவைகளுக்கு சிறந்த உணவு தெரிவுகள் என்ன என்பதை தெரிந்துக் கொள்ள உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரிடம் பேசுவதை உறுதி செய்யுங்கள். கொழுப்பு குறைந்த உணவுமுறையை எடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.



வேளை ஒன்றுக்கு குறைவாக, நாள் ஒன்றுக்கு அதிக தடவை சாப்பிடவும்: நாள் ஒன்றுக்கு அதிகமான இடைவெளிகளில் குறைவாக சாப்பிடுவது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவுகளை சமச்சீராக வைத்திருக்க உதவும். நீங்கள் 3-4 மணிநேரத்துக்கு ஒரு தடவை சாப்பிட திட்டமிட வேண்டும்.







அதிகமாக தண்ணீர் குடிக்கவும்: இன்சுலினுக்கு இருக்கும் எதிர்ப்பாற்றல் காரணமாக, பிசிஓஎஸ் உள்ள பெண்கள் தண்ணீர் எடை கூடுவது அல்லது சீக்கிரமாக நீர்ச்சத்து இழப்பை அனுபவிக்கலாம். எனவே, ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 8 கிளாஸ்கள் தண்ணீரை நீங்கள் குடிப்பது மிகவும் முக்கியமானதாகும்.






உடலியல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி: இது உங்களின் சக்தி அளவுகளை அதிகரிக்கிறது, சுய மதிப்பை மேம்படுத்துகிறது மற்றும் உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. எடையை பராமரிக்க தினமும் 30 முதல் 60 நிமிடங்கள் உடல்ரீதியிலான செயல்பாட்டில் ஈடுபடுவதை அரசாங்க வழிகாட்டுமுறைகள் பரிந்துரைக்கிறது. ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 90 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது.






ஒரு உணவுமுறை அட்டவணையை வெறுமனே பின்பற்றப்படுவதை விட உடல்ரீதியிலான செயல்பாடு அல்லது உடற்பயிற்சி உடன் உணவுமுறையை சேர்த்து பின்பற்றுவதன் மூலம் மிகவும் சிறப்பாக உணவு மேலாண்மையை எட்ட முடியும்.

பிசிஓஎஸ் உடன் உடல்பருமன் மற்றும் அதிக எடையுடன் இருக்கும் பெண்கள் எடையை குறைத்து மற்றும் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றினால் நீரிழிவு மற்றும் இதய ரத்த நாள நோய்கள் போன்ற நீண்ட கால ஆரோக்கிய பிரச்சனைகள் அவர்களுக்கு வரும் அபாயத்தை கணிசமாக குறைக்க முடியும்.
மருந்துகள்:

நீங்கள் பிசிஓஎஸ்-ஆல் அவதிப்பட்டு வந்தால், மையோ-இனோசிட்டல் மற்றும் மெட்ஃபார்மின் போன்ற இன்சுலினை குறைக்கும் மருந்துகள், ஆண் ஹார்மோன்-எதிர்ப்பு மருந்துகள், கருத்தடை மாத்திரைகள், கருமுட்டை விடுபடுவதை தூண்டும் மருந்துகள், விட்டமின் டி உபரி போன்றவற்றை எடுக்குமாறு உங்கள் மருத்துவர் உங்களை கேட்கலாம். மேற்கண்ட சிகிச்சை முறைக்கு நோயாளியிடம் பலன் இல்லையெனில் அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

மருந்துகள் எதுவும் எடுப்பதற்கு முன்பு தயவு செய்து உங்களின் அருகாமையில் இருக்கும் பெண் நோயியல் நிபுணரிடம் ஆலோசியுங்கள்.
Social   |     |     |